விஜய் 66 சென்னையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு

02.06.2022 05:49:57

பீஸ்ட் படத்தை அடுத்து தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் தனது 66வது படத்தில் தற்போது நடித்து வருகிறார் விஜய். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் இந்த படத்தில் சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து முடிந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஜூன் இரண்டாம் தேதி முதல் சென்னையில் நடைபெறுகிறது. இந்தப்படத்தின் ஒரு பாடல் காட்சி ஏற்கனவே படமாக்கப்பட்ட நிலையில் அடுத்தபடியாக இரண்டாவது பாடல் காட்சி சென்னையில் படமாக்கப்படுகிறது. மேலும் இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் விஜய் -ராஷ்மிகா மந்தனா சம்பந்தப்பட்ட அதிகப்படியான காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.