ரத்துச் செய்யப்பட்டது ஜனாதிபதி - கூட்டமைப்பு சந்திப்பு

16.03.2022 04:00:00

ஜனாதிபதிக்கும்  - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று நடைபெறவிருந்த சந்திப்பு திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது.

கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியினால் நேற்று அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்ட  நிலையில், போக்குரத்து நெரிசல்  காரணத்தினால் இந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.

அத்துடன் குறித்த சந்திப்பானது எதிர்வரும் 25 ஆம் திகதி காலையில் இடம்பெறும் என ஜனாதிபதி செயலகவட்டாரத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.