நடிகர் ஆர்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது

28.09.2021 10:41:25

காதலித்து திருமணம் செய்தவர்கள் நடிகர் ஆர்யா - நடிகை சாயிஷா தம்பதியர்.

ஆர்யா நடிப்பில் அடுத்தடுத்து டெடி, சார்பட்டா பரம்பரை படங்கள் ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்றன. அடுத்தப்படியாக இவரின் எனிமி, அரண்மனை 3 படங்கள் ரிலீஸாக உள்ளன. இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன் சாயிஷாவிற்கு பெண் குழந்தை பிறந்தது. தற்போது இந்த குழந்தைக்கு அரியனா என பெயர் சூட்டியுள்ளனர். அரியனா என்றால் பரிசுத்தமானது எனப் பொருளாம்.