முன்னாள் மத்திய வங்கி ஆளுநரின் பயணத் தடை நீடிப்பு !

23.05.2022 09:19:00

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடை நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கப்ராலுக்கு வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டுள்ள பயணத் தடை ஜுலை மாதம் 25 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதம நீதவான் ஹர்ஷன கெக்குணவெல இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னக்கோன் அவர்களினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு பதிலளிக்கும் வகையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையின் அல்லது நிதிச் சபையின் அனுமதியின்றி இமாத் ஷா சுபைரிக்கு, 6.5 மில்லியன் டொலர்களை செலுத்தியதன் மூலம், கப்ரால் குற்றத்தை புரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 2022 ஜனவரி 18ஆம் திகதி செலுத்த வேண்டிய முறிப் பத்திரங்கள் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு 500 மில்லியன் டொலர் நஷ்டத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.