கனமழை காரணமாக பாம்பாறு அணை நிரம்பியது

28.10.2021 15:03:27

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேவுள்ள பாம்பாறு அணை தொடர் நீர்வரத்தால் நிரம்பியுள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழையால் ஆண்டியப்பனூர் அணை, நிரம்பி உபரி நீர் பாம்பாறு அணைக்கு வருகிறது. ஜவாது மலையில் தொடரும் கனமழை காரணமாக அங்குத்தி சுனை வழியாக பாயும் நீர் பாம்பணையை நிரப்புகிறது.