கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு காலமானார்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாகவே சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். வயது மூப்பு மற்றும் உடல்நிலை காரணமாக அவருக்கு தொடர் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தது.
மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்துவந்தனர். ஆனாலும், அவரின் உடல்நிலை மோசமடைந்ததாகவும் நல்லக்கண்ணுவுக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் கூறினார். இந்நிலையில்தான், தற்போது சிகிச்சை பலனின்றி தோழர் நல்லக்கண்ணு மரணமடைந்திருக்கிறார்.
தமிழக அரசியலில் முதல் தலைமுறை தலைவர் நல்லக்கண்னு. சுதந்திர போரட்டத்தில் கலந்துகொண்டவர் இவர். மிகவும் எளிமையானவர். இறுதிக்காலம் வரை பணம், பதவிகளுக்கு ஆசைப்படாதவ்வர். வாழ்நாள் முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், சாதிய கொடுமைகளுக்கு எதிராகவும் போராட்டி வந்தார்., இதனால், வாழ்வில் பெரும்பாலான பகுதி நல்லக்கண்ணு சிறையில் கழித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பல பதவிகளை இவர் வகித்தார். நல்லக்கண்ணுவின் மரணத்திற்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.