ஃப்ளைதுபாய் விமான கவிழ்ப்பு சதி.

14.10.2026 15:17:16

துபாயிலிருந்து டெல் அவிவ் சென்ற 'ஃப்ளைதுபாய்'  விமானத்தை கவிழ்க்க முயன்ற ஓமன் நாட்டை சேர்ந்த இணை விமானியின் சதித்திட்டம் தொடர்பாக, ஐக்கிய அரபு அமீரக காவல்துறையினர் இரண்டு மாலத்தீவு விமானிகளை கைது செய்துள்ளனர். 

 

கடந்த செப்டம்பர் 30-ம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் போது, இந்திய நாட்டை சேர்ந்த விமானி ஸ்மித் மச்சார் மீதான தாக்குதலில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 

 கைது செய்யப்பட்ட மாலத்தீவு விமானிகள் அந்த ஓமானிய இணை விமானியுடன் ஒரே கட்டிடத்தில் தங்கியிருந்ததுடன் அவருடன் தொடர்பில் இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது. இது குறித்து மாலத்தீவு அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. 

 

விமானத்தை காப்பாற்றிய இந்திய விமானிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சதித்திட்டத்தின் பின்னணி குறித்து அமீரக அதிகாரிகளும் தேசிய புலனாய்வு முகமையும் விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.