இதுவரையில் 631 முறைப்பாடுகள் பதிவு

20.08.2024 08:35:45

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (18) மாலை வரை மொத்தம் 631 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

ஜூலை 31 முதல் ஒகஸ்ட் 18 வரையிலான காலப்பகுதிக்குள் இந்த முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (18) பதிவாகிய 65 முறைப்பாடுகள் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானவை என அவர்கள் தெரிவித்தனர்.

631 முறைப்பாடுகளில், தேசிய தேர்தல் முறைப்பாடுகள் மையம் 346 முறைப்பாடுகளையும், மாவட்ட மையங்கள் 285 முறபைபாடுகளையும் பெற்றுள்ளன.

அனைத்து முறைப்பாடுகளும் சட்ட மீறல்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஒரு வன்முறை சம்பவமும் பதிவாகியுள்ளது