அதிக அளவில் முதலீடு செய்ய இந்தியாவுக்கு இலங்கை அழைப்பு

17.01.2022 10:00:00

கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நம் அண்டை நாடான இலங்கை, துறைமுகம், உள்கட்டமைப்பு, மின்சாரம், உற்பத்தி துறைகளில் அதிக முதலீடு செய்யும்படி இந்தியாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையின் அன்னியச் செலாவணி கையிருப்பு கடுமையாக சரிந்துள்ளது. மேலும் பல்வேறு அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இந்த நிதி நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக இலங்கைக்கு 6,700 கோடி ரூபாய் கடனுதவி அளிப்பதாக இந்தியா அறிவித்துள்ளது.

இந்நிலையில், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை, இலங்கை நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே நேற்று முன்தினம் நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவின் உதவிக்கு அவர் நன்றி தெரிவித்தார். துறைமுகம், உள்கட்டமைப்பு, மின்சாரம் உள்ளிட்ட துறைகளில் இந்தியா அதிக முதலீடு செய்யும்படி அவர் வலியுறுத்தினார். இந்திய முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழ்நிலையை உருவாக்கித் தருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்காக இந்திய அரசு சார்பில் கட்டித் தரப்பட்ட 1,000 வீடுகள் நேற்று பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.