நாளாந்தம் 4 மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும்

21.01.2022 11:45:24

நாளாந்தம் சுமார் 04 மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்படலாம் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

குறைந்தபட்சம் 2022 மார்ச் மாதத்திற்குள் பெரிய அளவிலான கடனைப் பெற்றுக்கொள்ள இலங்கை தவறினால் இந்நிலை ஏற்படும் என கூறினார்.

ஏப்ரல் மாதம் பருவமழை தொடங்கும் வரையில் தற்போதுள்ள வரையறுக்கப்பட்ட வெளிநாட்டு கையிருப்பில் எரிபொருளை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும் என அவர் கூறினார்.

இருப்பினும் மழைக்காலம் வரை நாட்டில் எரிபொருளை பயன்படுத்தியே மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் எதிர்காலத்தில் நான்கு மணி நேர மின்வெட்டுக்கு பதிலாக, இப்போதிருந்தே ஒன்றரை மணி நேர மின்வெட்டை அமுல்படுத்துவது நல்லது என்றும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.