தமிழ்நாட்டில் கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் மாயமாகவில்லை!
07.08.2021 15:19:57
தமிழ்நாட்டில் கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் மாயமாகவில்லை என்று ஐகோர்ட்டில் இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ஆ.ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது. கோயில் நில விவரங்களை ஆவணங்களுக்கு தாக்கல் செய்ய செயல் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.