நாட்டின் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை..!
04.04.2023 21:03:03
நிலவும் சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு, நாட்டின் மூன்று மாவட்டங்களில் மண்சரிவு அபாய நிலையை அறிவிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, இந்த மண்சரிவு அபாயம் கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளை மையப்படுத்தி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அபாய அறிவிப்பு நாளை (05) மாலை 5 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.