சேலத்தில் மக்கள் சந்திப்பு!

19.12.2025 14:18:39

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 2 மாதங்களுக்கு முன்பு ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்தினார். தஞ்சாவூர், திருவாரூர், நாமக்கல் போன்ற மாவட்டங்களுக்கு சென்றார். அதன்பின் அவர் கரூர்க்கு சென்றிருந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி அசம்பாவிதம் ஏற்பட்டு அங்கு 41 பேர் உயிரிழந்தனர்.

இது தவெகவிற்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. எனவே கடந்த இரண்டு மாத காலமாக விஜய் மக்கள் சந்திப்பை நடத்தவில்லை. இந்த 5ம் தேதி சேலத்தில் மக்கள் சந்திப்பை எடுத்த தவெக சார்பில் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், போலீசார் அனுமதி கொடுக்கவில்லை

. எனவே, புதுச்சேரியில் சென்று பேசினார் விஜய். மேலும் நேற்று ஈரோடு பெருந்துறையில் நடந்த பொதுக்கூட்டத்திலும் விஜய் கலந்து கொண்டார்.

ஈரோட்டில் விஜய் திமுகவை மிகவும் கடுமையாக விமர்சித்து பேசியது தவெகவினரிடமும் விஜய் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. விஜயின் நன்றாக பேசியிருக்கிறார் என அரசியல் விமர்சகர்களே சொல்லியிருக்கிறார்கள். இந்நிலையில், டிசம்பர் 30ம் தேதி தவெக சார்பில் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு கூட்டம் சேலத்தில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

சிலநாயக்கன்பட்டி உள்ளிட்ட மூன்று இடங்களை குறிப்பிட்டு காவல் துறையினரிடம் தவெக சார்பில் அனுமதியும் கேட்க திட்டமிட்டிருக்கிறார்களாம். இந்த செய்தி சேலம் மாவட்ட தவெக நிர்வாகிகளிடம் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.