மின்சார பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை

06.03.2024 07:00:00

நவீன வசதிகளுடன் கூடிய 200 மின்சார பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதன் முதற்கட்டமாக தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் 50 மின்சார பஸ்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் தனியாராலும், இலங்கை போக்குவரத்து சபையாலும் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பஸ்களிலும் சி.சி.ரி.வி. கெமராக்களை பொருத்துவது கட்டாயமாக்கப்படும் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்