பிரித்தானியாவில் புலிகள் மீதான தடை தொடந்து நீடிக்கும்
பிரித்தானியாவில் அமுல்படுத்தப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு கோரி முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பிரித்தானிய நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்ட பட்டியலிலிருந்து விடுதலைப் புலிகளை நீக்குவதற்கு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய பாராளுமன்றத்தால் நிறுவப்பட்ட மேல்முறையீட்டு நீதிமன்றம், உயர் நீதிமன்ற நீதிபதி மற்றும் இரண்டு ஓய்வுபெற்ற மூத்த தூதர்கள் தலைமையில், தடையை நீக்குவதற்கான மனு பரீசீலணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, ‘தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு” கோரி முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரிப்பதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதேவேளை, விடுதலைப் புலிகள் மீதான தடையை பிரித்தானியா தொடர்ந்தும் கடைப்பிடிக்கும் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.