
ஹீரோயின் ஆன பிக்பாஸ் ஜனனி!
04.01.2025 08:00:00
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலம் ஆனவர் ஜனனி. இலங்கையை சேர்ந்த அவர் அந்த ஷோ மூலமாக தமிழ்நாட்டில் பாப்புலர் ஆகி இருந்தார். ஜனனி அதன் பின் விஜய் உடன் லியோ படத்திலும் நடித்து இருந்தார். சின்ன ரோல் தான் என்றாலும் அவருக்கு நல்ல பாராட்டுகளும் கிடைத்தது. |
தற்போது ஜனனி கோலிவுட்டில் ஹீரோயினாக நடிக்க தொடங்கி இருக்கிறார். அவர் டீஜே அருணாச்சலம் ஜோடியாக உசுரே என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது. |