ஆந்திர பிரதேசத்தில் வெள்ளப்பெருக்கினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 44ஆக உயர்வு

28.11.2021 07:42:17

இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தில் பெய்துவரும் கடும் மழையுடன் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், மரணித்தவர்களின் எண்ணிக்கை 44ஆக உயர்வடைந்துள்ளது.

16 பேர் காணாமல் போயுள்ளதாக மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆந்திர பிரதேசத்தின் நான்கு மாவட்டங்களில், சுமார் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளமையினால், பெருமளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சில இடங்களில் நீர்த்தேக்கங்கள் சேதமடைந்துள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.