கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இல்லத்திற்கு அருகில் பதற்றம்

26.08.2023 15:51:58

நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இல்லம் ஆர்ப்பாட்டக்காரர்களினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

 

இதன்போது  ”வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த  தமிழ் அரசியல்வாதிகள் தெற்கில் சுதந்திரமாக வாழ்வதை போன்று சிங்களவர்களும்  வடக்கு மற்றும் கிழக்கில் சுதந்திரமாக வாழ வேண்டும் என தெரிவித்து குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இச்சம்பவத்தினையடுத்து  அவரது வீட்டுக்கு முன்பாக  பெருமளவான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர் எனவும், இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தாiர்.

கொழும்பில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு முன்பாக போராட்டம் நடத்தப் போவதாகவும் முதல் கட்டமாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டுக்கு முன்னால் போராட்டம் நடத்தவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில அண்மையில்  தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.