
பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஜனாதிபதி ஆலோசனை!
26.02.2025 08:21:13
இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்த கலந்துரையாடல் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. |
இலங்கையின் பாதுகாப்பு நிலைமை தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்த இக்கலந்துரையாடலில் மூத்த இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது. பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொண்டா மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ மற்றும் இலங்கை இராணுவத்தின் பல மூத்த அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். |