இப்போது தான் சரியான வேலையை பார்க்கும் CMDA.

09.07.2026 07:51:43

சென்னை பெருநகரப் பகுதியின்  எதிர்கால வளர்ச்சியை 2046 ஆம் ஆண்டுவரை வழிநடத்தும் நோக்கில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்  தனது 3-வது பெருந்திட்டத்திற்கான  வரைவுப் முன்மொழிவுகள் குறித்த கலந்தாலோசனைகளைத் தீவிரமாகத் தொடங்கியுள்ளது. சென்னை மாநகராட்சி  , மெட்ரோவாட்டர், காவல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு அமைப்புகளுடன் இந்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாக புவியியல் தகவல் அமைப்பு  அடிப்படையிலான நீடித்த மற்றும் நிலையான திட்டமிடல், செயற்கை நுண்ணறிவு , ட்ரோன் ஆய்வுகள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் உள்கட்டமைப்புகளை உருவாக்குதல் ஆகியவை முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, நீர்நிலைகளைப் பாதுகாத்தல், வெள்ளப் பாதிப்புகளைக் குறைத்தல் மற்றும் நகர்ப்புறக் காடுகளை அதிகரித்தல் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

 

மேலும், நகரின் நெரிசலான மையப் பகுதிகளுக்குப் பதிலாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்போரூர், ஓஎம்ஆர் மற்றும் ராணிப்பேட்டையின் சில பகுதிகளில் செங்குத்து வளர்ச்சி மற்றும் தளப் பரப்பு குறியீட்டை அதிகரிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் இறுதி வரைபடம் இன்னும் மூன்று மாதங்களில் முதலமைச்சரால் முறைப்படி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.