தேவாவின் சகோதரர் சபேஷின் மகன் மரணம்!
20.10.2026 08:21:11
தமிழ் சினிமா உட்பட 400க்குக்ம் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் தேனிசை தென்றல் தேவா. சமீபத்தில் மாரடைப்பு காரணமாக அவர் காலமானார். அவருக்கு ரசிகர்களும், திரையுலகினரும் அஞ்சலி செலுத்தினர்.
அவர் இறுதி அஞ்சலியின் போது அவருக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. கடந்த 17ம் தேதி தேவா காலமான நிலையில் 18ம் தேதி ராணிப்பேட்டையில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் சபேஷின் மகன் கார்த்திக் சபேஷ்( 37) உடநலக் குறைவால் இந்த அதிகாலை மரணமடைந்தார். வல்லவன், காதல் சொல்ல வந்தேன், பட்டத்து யானை, குளிர் 100 டிகிரி உள்ளிட்ட சில தமிழ் திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.