நீ உயிரோடு இருந்திருந்தால்..!
பூவிழி வாசலிலே, மனிதன், என் பொம்மு குட்டி அம்மாவுக்கு, அஞ்சலி, பாட்ஷா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் ரகுவரன். ரகுவரன் மார்ச் 19ம் தேதி 2008ஆம் ஆண்டு காலமானார்.
பூவிழி வாசலிலே, மனிதன், என் பொம்மு குட்டி அம்மாவுக்கு, அஞ்சலி, பாட்ஷா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் ரகுவரன். பாட்ஷா திரைப்படத்தில் இவர் நடித்த மார்க் ஆண்டனி கதாப்பாத்திரம் இன்றளவும் ரசிகர்களின் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளது.
இவர் நடிகை ரோகினையை கடந்த 1996ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். பின்னர், 2004ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். ரகுவரன் மார்ச் 19ம் தேதி 2008ஆம் ஆண்டு காலமானார்.
இந்நிலையில் இன்று நடிகர் ரகுவரனின் நினைவு தினத்தையொட்டி அவரது மனைவியும் நடிகையுமான ரோகினி சமூக வலைத்தளத்தின் வாயிலாக அவரை நினைவு கூர்ந்துள்ளார். அவர் பதிவிட்டிருப்பது, ரகுவரன் இருந்திருந்தால் தற்போதைய சினிமாவை நிச்சயம் விரும்பியிருப்பார். மேலும் ஒரு நடிகராகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.