தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

05.07.2022 09:05:35

12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இந்திய எல்லைப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து கைது செய்துள்ளனர். படகுகளையும் பறிமுதல் செய்தனர். இந்த நடவடிக்கை தமிழக மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 12 பேரை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு ஓ.பன்னீர் செல்வம் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:- கடந்த 2 மாதங்களுக்கு பிறகு மீன்பிடி தடை காலம் முடிந்து தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர். 3-ந்தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இந்திய எல்லைப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து கைது செய்துள்ளனர். படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

இந்த நடவடிக்கை தமிழக மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 12 பேரை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுஉள்ளார். அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓ.பன்னீர் செல்வம் மத்திய மந்திரிக்கு கடிதம் அனுப்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.