என்னை நம்புங்கள்!

27.05.2022 10:14:00

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ‘என்னை நம்புங்கள், வெளியேற வேண்டாம்’ என தனது கையைப் பிடித்து இழுத்ததாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தமக்கு வெட்கமில்லை எனத் தெரிவித்த சஜித் பிரேமதாச, தாம் பிரதமராகப் பதவியேற்றிருந்தால் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் கீழ் பதவியேற்றிருப்பேன் எனவும் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.

சஜித் பிரேமதாசவின் தனிப்பட்ட ஆலோசகர் ஐக்கிய மக்கள் சக்தியை அழித்து வருவதாகவும் இம்முறை ரணில் விக்ரமசிங்க விளையாட்டை ஆரம்பித்தால் ஐக்கிய மக்கள் சக்தியின் கதை முடிவுக்கு வரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இணைய ஊடகமொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.