நாளை முதல் அனைத்து பாடசாலைகளும் ஆரம்பம்
06.03.2022 05:40:58
நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளும் நாளை(07) முதல் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ள பாடசாலை தவணையின் போது மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாணவர்களை பாடசாலைகளுக்கு அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, ஒரு வகுப்பில் மாணவர்களின் எண்ணிக்கை 20 அல்லது அதற்கும் குறைவாக இருந்தால், அவர்களுக்கான வகுப்புகளையும் தினமும் நடத்தலாம்.
மாணவர்களின் எண்ணிக்கை 21 முதல் 40 வரை இருந்தால், வகுப்பை இரண்டு குழுக்களாகப் பிரித்து ஒரு வாரம் இடைவெளியில் வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
40 மாணவர்களுக்கு மேல் இருந்தால், மாணவர்களை மூன்று சம பிரிவுகளாகப் பிரித்து வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.