ஈரான் எச்சரிக்கை!

20.10.2026 08:32:01

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ஆதரவு நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மீண்டும் ஈரானை குறிவைத்து தாக்குதல் நடத்தினால் மத்திய கிழக்கில் அமைந்துள்ள அமெரிக்காவின் கூட்டணி நாடுகள் தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் ஆலோசகர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

 

ஈரானின் பழமைவாத அரசியல்வாதியான முகமது மொக்பர், ஈரானின் இராணுவ தளங்கள் அல்லது எரிசக்தி தொழிற்சாலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், மத்திய கிழக்கில் உள்ள 9 ஆதரவு நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

அரசிற்கு நெருக்கமான ஈரானின் அரை அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான தஸ்னிம் வெளியிட்ட அவரது காணொளிப் பதிவில் இந்தக் கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன.

ஆனால் ஈரானின் தாக்குதல் தொடர்பில் கூறப்பட்ட கருத்தில் அந்த 9 நாடுகள் எவை என்று அதில் தெளிவாக குறிப்பிடவில்லை.

இதற்கிடையில் மத்திய கிழக்கில் உள்ள பல அமெரிக்க இராணுவ தளங்கள் தற்போது செயல்படவில்லை. அல்லது அவை ஈரானில் இருந்து வெகு தொலைவிற்கு நகர்த்தப்பட்டுள்ளன என ஈரானின் புரட்சிகர காவல் படையின் பேச்சாளர் ஹொசைன் மொஹேபி தெரிவித்துள்ளார்.

அத்துடன் அமெரிக்கா தனது முழு இராணுவ வலிமையையும் பயன்படுத்திப் போரில் ஈடுபட்டுள்ளதாகவும், தற்போது புதிய மோதலைத் தொடங்குவதன் மூலம் அமெரிக்காவுக்குப் புதிய நன்மைகள் கிடைக்காது என்றும் குறிப்பிட்டார்.