ஆசிய செம்பியன்ஷிப் வலைப்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு தலா 2 மில்லியன் ரூபா வழங்கிய சிறிலங்கா கிரிக்கெட்.!
ஆசியக் கிண்ணத்தை வென்ற இலங்கை கிரிக்கெட் அணி, ஆசிய செம்பியன்ஷிப் வலைப்பந்தாட்ட அணி மற்றும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற இலங்கை அணிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு விழா அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது.
இந்த பாராட்டு விழா கொழும்பில் உள்ள சினமன் லேக்சைட் ஹோட்டலில் நடைபெற்றது.
வைத்தியசாலைக்கு நிதியுதவி
இதன்போது , ஆசிய செம்பியன்ஷிப்பில் வெற்றி பெற்ற வலைப்பந்து வீராங்கனைகளுக்கு தலா 2 மில்லியன் ரூபாய், சிறிலங்கா கிரிக்கெட்டால் வழங்கப்பட்டது.
அத்துடன், வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு 10 மில்லியன் ரூபாவும், வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு 5 மில்லியன் ரூபாவும், அவர்களின் பயிற்சியாளர்களுக்கு 25% வீதமும் விளையாட்டு நிதியிலிருந்து வழங்ப்பட்டது.
இதற்கிடையில், நிகழ்வின் போது மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு (தேசிய புற்றுநோய் நிறுவனம்) நன்கொடையாக 500,000 அமெரிக்க டொலர் காசோலையை சிறிலங்கா கிரிக்கெட் அதிபரிடம் கையளித்தது