ரோமேனியாவில் கொவிட்-19 மொத்த உயிரிழப்பு 30ஆயிரத்தை நெருங்குகிறது !
24.05.2021 12:37:31
ரோமேனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 30ஆயிரத்தை நெருங்குகிறது.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ரோமேனியாவில் கொவிட்-19 தொற்றினால் 29ஆயிரத்து 941பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 26ஆவது நாடாக விளங்கும் ரோமேனியாவில் இதுவரை 10இலட்சத்து 75ஆயிரத்து 543பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 307பேர் பாதிக்கப்பட்டதோடு 56பேர் உயிரிழந்துள்ளனர்.