குவிக்கப்படவுள்ள ஆயுதமேந்திய படையினர் ! கோட்டாபயவின் விசேட உத்தரவு

22.11.2021 16:16:00

இலங்கையில் அனைத்து ஆயுதம் தாங்கிய முப்படையினருக்கும் அழைப்பு விடுக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) வெளியிட்டுள்ளார்.

இதனையடுத்து, இன்று முதல் அமுலாகும் வகையில் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய கடற்பரப்புகளில் பாதுகாப்பைப் பேணுவதற்காக இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21 தாக்குதலைத் தொடர்ந்து, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, (Maithripala Sirisena) ஆயுதம் தாங்கிய படையினரை அமைதியை பேண அழைப்பு விடுத்து விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தார்.

இந்த நடவடிக்கை ஒரு மாத காலத்திற்கு அமுலாகும் வகையில் இன்று 22ஆம் திகதி இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.