உக்ரைனிய படையினர் ஊடுருவித் தாக்குதல்

08.08.2024 08:40:55

உக்ரைனிய படையினர் எல்லையை கடந்து ரஸ்யாவிற்குள் நுழைந்து தாக்குதல் மேற்கொண்டதில், ரஷ்ய இராணுவத்தினருக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை அடுத்து, அபாயப் பகுதிகளில் உள்ள மக்களை தற்காலிகமாக வெளியேற்ற ரஷ்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் இராணுவத்தை சேர்ந்த 300 பேர் எல்லை கடந்து ரஸ்யாவிற்குள் நுழைந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

அந்தவகையில், உக்ரெய்ன் படையினர் கருங்கடலின் வடக்கு பகுதியில் சுமார் 10 கிலோ மீற்றர்வரை ஊடுருவி மேற்கொண்ட இந்தத் தாக்குதலில் ரஷ்ய படையினர் பலர் கொல்லப்பட்டதுடன் அவர்களது இராணுவ உபகரணங்களும் அழிக்கப்பட்டதாக உக்ரெய்ன் பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

 

11 டாங்கிகள் மற்றும் 20 இக்கும் மேற்பட்ட கவசவாகனங்களின் உதவியுடன் கேர்க்ஸ் பிராந்தியத்தின் எல்லை கிராமங்களிலும், முன்னரங்குகளில் உக்ரைனிய படையினரால் இந்தத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தாக்குதலின்போது ரஷ்ய படையினரின் கவசவாகனங்கள், இலத்திரனியல் போர் உபகரணங்கள் என்பன அழிக்கப்பட்டதோடு, ரஷ்ய படைக்கும் பெரும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், இந்த ஊடுருவல் தாக்குதலால், ஐந்து பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 31 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் ஆறு சிறார்கள் அடங்குவதாகவும் ரஷ்ய தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும், ரஷ்ய பாதுகாப்பு அமைப்பால் பல ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதுடன், இராணுவ தளவாடக் கிடங்கு ஒன்றிலும் தீப்பரவியுள்ளதாக சர்வதேச செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

பல மணி நேரத்திற்கு நீண்ட இந்த தாக்குதலை அடுத்து, அபாயப் பகுதிகளில் உள்ள மக்களை தற்காலிகமாக வெளியேற்ற ரஷ்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.