திமுகவை வறுத்தெடுத்த சவுக்கு சங்கர்!

23.05.2026 11:11:01

யூடியூபர் சவுக்கு சங்கர் சிறையிலிருந்து வெளியான நிலையில், திமுக அரசை கடுமையாக விமர்சித்து, முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்துகளை கூறியிருக்கிறார். கடந்த திமுக ஆட்சி மீது கடுமையா விமரச்னங்களை வைத்தவர்களில் முக்கியமானவர் சவுக்கு சங்கர். பலருமுறை அவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார். மேலும் கண்டறிக சனி பெயர்ச்சி Politics ஜோதிட பலன்கள் தமிழ் நியூஸ் குரு பெயர்ச்சி சரியான தீர்ப்பு தற்போது அவர் ரிலீசாகியிருக்கும் நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருந்தார்.

அதில் அவர் பேசியதாவது, "நான் 3 ஆண்டு காலம் மீண்டும் மீண்டும் சிறைக்கு வந்தபோது கூட, எங்கு என்னுடைய உழைப்பு வீணாகிவிடுமோ என்று பயந்திருந்தேன். ஆனால் திமுகவை தூக்கி எறிந்ததன் மூலம், கொளத்தூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தோற்கடித்ததன் மூலம், மக்கள் அற்புதமான தீர்ப்பை வழங்கியிருக்கறார்கள். அதனை சரியாக புரிந்துக்கொண்டு முதலமைச்சர் விஜய் ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறார் என்று நான் செய்திதாள்களை பார்த்த வரையில் புரிந்துக்கொள்கிறேன். குண்டாஸ் ரத்து தவெகவின் இந்த கூட்டணி 5 ஆண்டுக்காலத்தை நிறைவு செய்ய வேண்டும்.

வழக்கமாக குண்டாஸ் ரத்து செய்யப்பட வேண்டும் எனில், அட்வைசரி போர்டுக்கு முன்பு போய் ஆஜராக வேண்டும். அவர்கள் குண்டாஸை ரத்து செய்தார்கள் எனில், அந்த உத்தரவு சிறைக்கு வர 8-10 நாட்கள் வரை ஆகும். நான் திங்கட்கிழமை ஆஜராகியிருந்ததேன். புதன்கிழமை என் மீதான் குண்டாஸ் ரத்து செய்யப்பட்டது. இந்த உத்தரவை படித்த முதலமைச்சர் உடனடியாக எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் தற்போது என்னை விடுவித்திருக்கிறார்கள். அருண் ஐபிஎஸ் நாட்டில் என்ன நடக்கிறது என்பதை கடந்த 4-5 ஆண்டுகளாக மக்கள் பார்த்துக்கொண்டிருந்ததால்தான் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்தார்.

இதன் பின்னணியில்தான் விஜய் அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார். கடந்த 3 ஆண்டுகளில் சவுக்கு மீடியாவில் ஒவ்வொருவரும் சந்தித்த துன்பங்கள் என்ன? என் தாய் அகால மரணம் ஏன் அடைய வேண்டும்? என்பதை முதல்வரும், தவெகவும் பார்த்துக்கொண்டிருக்கிறது. எனவே அருண் ஐபிஎஸ் மீது நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன். திமுக போல கொடூர மனம் கொண்ட கட்சி, எந்த காலத்திலும் இருக்க முடியாது. ஊடகங்களிடம் தங்கள் மீதான விமர்சனங்களை குறைவாக வையுங்கள் என்றுதான் எல்லா கட்சிகளும் கேட்டு வந்திருந்தன. ஆனால், விமர்சனங்களை வைக்கும் ஊடகத்தினரை சிறையில் அடைத்த கொடுத்த அரசாங்கம் திமுகதான்.

விஜய் ஊடகத்தில் வரும் விமர்சனங்களை கருத்தில் கொண்டு, தன்னை சரி செய்து வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி தற்போது தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்திருப்பதால், கூடுதல் ஜனநாயகம் இருக்கும். விஜய்க்கு தெரியாமல் காவல்துறை ஏதேனும் நெருக்கடியில் ஈடுபட்டால் கூட, கூட்டணி கட்சிகள் விஜய்க்கு அதை சுட்டிக்காட்டும்.எனவே தமிழகத்தில் ஊடக சுதந்திரம் வலுவாக இருக்கும். ஊடகங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். 2004 மற்றும் 2009ல் மத்தியில் மன்மோகன் சிங் தலைமையிலான கூட்டணி ஆட்சி காலத்தில் இருந்தபோதுதான் நாடு சிறப்பான வளர்ச்சியை அடைந்தது. உலகமே மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்த போதுகூட, இந்தியாவின் ரூபாய் வளர்ச்சியடைந்தது. வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள மக்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. தகவல் அறியும் உரிமை சட்டம், 100 நாள் வேலை திட்டம் போன்ற சிறப்பான சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. காரணம் கூட்டணி ஆட்சிதான். அதேபோல தவெகவின் கூட்டணி ஆட்சியும் சிறப்பாக இருக்கும்" என்று கூறியிருக்கிறார்.