சீன இறைச்சி சந்தையில் 18 ஆபத்தான வைரஸ்

18.11.2021 08:44:40

கொரோனா தொற்று நோயை போன்று சீனாவின் இறைச்சி சந்தையில் 18 வகையான ஆபத்தான வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சீனாவின் வூஹான் மகாணத்தில் கடந்த 2019ல் பரவிய கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 51.29 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

கிட்டத்தட்ட 25.50 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தொற்று நோயானது வூஹானில் உள்ள கடல் உணவு இறைச்சி சந்தையில் இருந்து பரவியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதே மேலும் ஆபத்தான 18 வகையான வைரஸ்கள் உள்ளதாக சீனா, அமெரிக்கா, பெல்ஜியம் மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்து சீனாவில் உள்ள நாஞ்சிங் விவசாய பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவக் கல்லூரி ஆசிரியர் ஷுவோ சு கூறுகையில், ‘SARS-CoV மற்றும் SARS-CoV-2 வைரஸ் கிருமிகள் பரிசோதிக்கப்பட்டன. நாடு முழுவதும் 1,725 விலங்குகளின் மாதிரிகள் எடுத்து ஆராய்ச்சி நடத்தப்பட்டது.

அதில் 71 பாலூட்டி விலங்குகளில் வைரஸ்களைக் கண்டறிந்துள்ளோம். இவற்றில் 18 வகையான வைரஸ்கள் மனிதர்களை தாக்கக் கூடியவை. மிகவும் ஆபத்தான இந்த வைரஸ் வகைகள் SARS-CoV போன்ற வடிவத்தில் இல்லை. மாறாக SARS-CoV-2 வகையான வைரஸ்களாக உள்ளன. ஹுவாங்டாங் மற்றும் குவாங்சி மகாணங்களில் இந்த வைரஸ்கள் உள்ளன’ என்றார்.