
புதிய டிரெண்ட்டை உருவாக்கும் பூஜா ஹெக்டே
22.10.2021 16:10:32
பொதுவாக திரைப்பட விளம்பர நிகழ்ச்சிகளில் முன்னணி நடிகர்களை சிறப்பு விருந்தினராக அழைத்து தான் நடத்துவார்கள். அதுதான் திரையுலகில் வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் தற்போது முதன்முறையாக தெலுங்கில் தயாராகியுள்ள வருடு காவலேனு என்ற படத்தின் ஆடியோ விழாவை நாளை பூஜா ஹெக்டேவை சிறப்பு விருந்தினராக அழைத்து அவர் தலைமையில் நடத்துகிறார்கள். நாகசெளரியா, ரிது வர்மா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். அந்தவகையில் தெலுங்கு சினிமாவில் ஒரு கதாநாயகியை முதன்மைப்படுத்தி இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி தான் முதன்முதலாக நடைபெறுவதாகவும், இதன்மூலம் டோலிவுட்டில் ஒரு புதிய டிரெண்ட்டை பூஜா ஹெக்டே உருவாக்கியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.