பேஸ்புக்கால் வந்த காதல் 14 வயது சிறுமியை அழைத்த மட்டக்களப்பு இளைஞன்!

09.04.2022 08:40:45

மட்டக்களப்பில் உள்ள இரவு விடுதியில் தங்கியிருந்த இளைஞர், பெண் மற்றும் சிறுமி ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் 28 வயதுடைய பெண்ணொருவரும் அவரது சகோதரியான 14 வயதுடைய பெண்ணும் காணாமல் போயுள்ளதுடன், இளைஞர் ஒருவருடன் விடுதி ஒன்றில் காணப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரில் இளைஞர் ஒருவர் உட்பட இருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 28 வயது திருமணமான பெண் , அவரது சகோதரியான 14 வயது பெண்ணை மாலை 5 மணியளவில் தனியார் வகுப்புக்கு அழைத்துச் சென்றுள்ளார் .

செவ்வாய்கிழமை (5) இரவு ஆகியும் அவர்கள் வீட்டிற்குச் செல்லவில்லை என அவர்களது உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். நாவற்குழி பகுதியில் புதன்கிழமை (6) இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 22 வயதுடைய இளைஞனுடன் ஹோட்டல் அறையொன்றில் பதுங்கியிருந்த சிறுமியையும் அவரது சகோதரியையும் கைது செய்துள்ளனர்.

குறித்த இளைஞன் வாழைச்சேனை பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதுடன் அவருக்கும் 28 வயதுடைய திருமணமான பெண்ணுக்கும் பேஸ்புக் ஊடாக அறிமுகம் ஏற்பட்டது என்றும்  . குறித்த பெண் தனது வீட்டில் இருந்து தனது சகோதரனின் பணத்தை திருடி தனது தங்க நகைகளை அடகு வைத்து சுமார் 4 இலட்சம் ரூபாவை குறித்த இளைஞனுக்கு அடிக்கடி அனுப்பி வைத்துள்ளார்.

அந்த இளைஞன், அவளது  14 வயது சகோதரியை அழைத்துக் கொண்டு வரும்படி பெண்ணிடம் கூறி   செவ்வாய்கிழமை முச்சக்கர வண்டியில் வீட்டை விட்டு வெளியேறி,  சகோதரியை இளைஞன் தன்னுடன் அழைத்துச் செல்வதாகக் கூறியதாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிகிறது.

கைது செய்யப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், கைது செய்யப்பட்ட இளைஞனையும் பெண்ணையும் நேற்று முன்தினம் (07) மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தி 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.