"பாபர் மசூதி மீண்டும் கட்டப்படாது".

12.02.2026 13:01:04

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பாபர் மசூதி குறித்து கூறியுள்ள கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அயோத்தியில் ராமருக்காக முதலில் வந்தவர்கள் பாஜகவினர் தான் என்ற யோகி ஆதித்யநாத், உலகம் அழியும் நாள் வரை பாபர் மசூதி மீண்டும் கட்டப்படாது என்று கூறி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். அவரது பேச்சு இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. நமது நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் இப்போது பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

அங்கு யோகி ஆதித்யநாத் முதல்வராக இருக்கிறார். உபியில் சட்ட ஒழுங்கைப் பாதுகாக்க அம்மாநில அரசு பல நடவடிக்கைகளை எடுக்கிறது. இருப்பினும், புல்டோசர், என்கவுண்டர் என அங்கு நடக்கும் விஷயங்கள் தொடர்ச்சியாகச் சர்ச்சையைக் கிளப்பி வருகிறது. யோகி ஆதித்யநாத் இதற்கிடையே உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பாரபங்கில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாபர் மசூதி தொடர்பாகச் சில சர்ச்சை கருத்துகளைக் கூறியிருக்கிறார்.

உலகம் அழியும் நாள் வரை பாபர் மசூதி மீண்டும் கட்டப்படாது என்றும் இந்த விவகாரத்தில் யாருடைய கற்பனை கனவுகளும் பலிக்காது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் அரசு உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில், "உலகம் அழியும் நாள் வரை பாபர் மசூதி மீண்டும் கட்டப்படாது. அயோத்தி விவகாரத்தில் நாங்கள் தொடக்கம் முதலே தெளிவாகவே இருந்தோம். நாங்கள் ராமருக்கு வருவோம், அதே இடத்தில் கோயில் கட்டுவோம் என்பதே எங்கள் நிலைப்பாடு. அதை நடத்தியும் காட்டினோம்.

இந்தியாவின் பாரம்பரியம், புகழ்பெற்ற மரபுகள் மற்றும் சனாதன தர்மம் ஆகியவற்றை மதிக்க வேண்டும். இங்குப் பறக்கும் காவிக் கொடி தான் நாட்டின் பெருமையை எப்போதும் உயர்த்தும். அயோத்தி ஸ்ரீ ராமர் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி காவிக் கொடியை ஏற்றியதைச் சனாதனத்தின் அடையாளம்.. இங்குச் சில சந்தர்ப்பவாதிகள் உள்ளனர். அவர்கள் நெருக்கடியான வேளைகளில் மட்டும் ராமரை நினைப்பார்கள். மற்ற நேரங்களில் ராமரை மறந்துவிடுவார்கள். நீங்கள் ராமரை மறந்தால், ராமரும் உங்களை மறந்துவிட்டார்.

ராமர் பக்தர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு இனி இங்கு இடமில்லை" என்றார் சட்டம் ஒழுங்கு சட்டம் ஒழுங்கு குறித்துக் கடுமையான எச்சரிக்கை விடுத்த அவர், மக்கள் விதிகளைப் பின்பற்றி வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். சட்டத்தைப் பின்பற்றுவோருக்கு அரசின் பயன் கிடைக்கும் என்றும் சட்டத்தை மீறுபவர்கள் நரகத்தை நோக்கிச் செல்வார்கள் என்றும் யோகி எச்சரித்தார். சட்டத்தை மீறுவதன் மூலம் சொர்க்கத்தை அடையலாம் என்ற கனவுகள் ஒருபோதும் நிறைவேறாது என்றும் அவர் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், "இந்தியா மற்றும் சனாதனம் பிரிக்க முடியாதவை. ஆனால், இப்போது நமது நாட்டிற்கு உள்ளே இருந்தும் வெளியிலிருந்தும் அச்சுறுத்தல்கள் வருவதால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். சிலர் சதித் திட்டம் தீட்டி, சுயநலத்திற்காகச் செயல்படுகிறார்கள். அவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். பாஜக ஆட்சி 2017ஆம் ஆண்டுக்கு (பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு) முன்பு உத்தரப் பிரதேசம் எப்படி இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.

கலவரங்கள், ஊரடங்குகள் எனப் பாதுகாப்பற்ற சூழலே இருக்கும். மகள்கள், வணிகர்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் பாதுகாப்பற்று இருந்தனர். கோயில்கள், பள்ளிகள் மற்றும் வீடுகள் கூட அச்சுறுத்தலுக்கு உள்ளாயின. அப்போது ஊரடங்கு என்பது ஒவ்வொரு வாரமும் இருக்கும். சட்ட ஒழுங்கு மிக மோசமாக இருக்கும். இப்போது அதை மாற்றி பாதுகாப்பான ஒரு சூழலை உருவாக்கியுள்ளோம்" என்றார்.