மாலைதீவு உயர்ஸ்தானிகர் தளபதி கலந்துரையாடல்

05.07.2023 10:10:00

இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் எச்.இ. அலி பைஸ் கடற்படைத் துணைத் தளபதி பிரியந்த பெரேராவை நேற்று (04) கொழும்பில் உள்ள கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பானது, இலங்கை - மாலைதீவு இடையேயான கூட்டு ஆணைக்குழுவின் நான்காவது அமர்வின் விளிம்பில் உத்தியோகபூர்வ கலந்துரையாடலாக இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து அவர்கள் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.

கலந்துரையாடல் 

அதுமாத்திரமன்றி இக்கலந்துரையாடலில் கடற்படைத் தளபதியின் கடற்படை உதவியாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய மற்றும் கொழும்பிலுள்ள மாலைதீவு உயர்ஸ்தானிகர் காரியாலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் ஹசன் அமீர் ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இக்கலந்துரையாடலானது நல்லெண்ணம் மற்றும் ஒத்துழைப்பைக் குறிக்கும் நினைவுச் சின்னங்களின் பரிமாற்றத்துடன் சுமுகமான கலந்துரையாடலாக நிறைவடைந்தது.