நேரடி விவாதத்துக்கு தயார்:

20.08.2024 08:31:26

செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களுடன் நேரடி விவாதத்திற்கு டெய்லி மிரர் மற்றும் லங்காதீப விடுத்த அழைப்பை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளார்.

டெய்லி மிரர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஜமிலா ஹுசைனுக்கு எழுதிய கடிதத்தில், சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகிய முன்னணி போட்டியாளர்களுடன் விவாதத்தில் கலந்துகொள்ள விருப்பம் நாமல் தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச கடிதத்தில் இந்த வகையான விவாதத்தை ஏற்பாடு செய்வதன் முக்கியத்துவத்தை நாமல் குறித்த கடிதத்தில் எடுத்துரைத்தார்.

“பிரதான வேட்பாளர்களிடையே பொது விவாதத்தின் இந்த நடைமுறையை நாம் புகுத்த வேண்டிய நேரம் இது, இதனால் குடிமக்கள் ஒவ்வொரு வேட்பாளரின் பார்வை, கொள்கைகள் மற்றும் செயல் திட்டங்களை ஒப்பீட்டளவில் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். எதிர்வரும் தேர்தலில் மக்கள் அறிவார்ந்த தீர்மானத்தை எடுக்க இது உதவும்”
என நாமல் குறிப்பிட்டுள்ளார்.