
இந்திய விமானப்படைக்கு வரும் புதிய போர் விமானம்!
இந்திய விமானப்படை, பாகிஸ்தானுடன் ஏற்பட்ட சமீபத்திய மோதல்களுக்கு பின்னர், புதிய HAL Tejas A1 போர் விமானங்களை இம்மாதம் பெற உள்ளது. இவை இஸ்ரேலின் முன்னோடியான ராணுவ தொழில்நுட்பங்களால் மேம்படுத்தப்பட்டுள்ளன. முன்னதாகவே 40 தேஜஸ் விமானங்களை இந்தியா பெற்றிருந்தாலும், இந்த புதிய A1 மொடல்கள் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் கொண்டவை. |
தேஜஸ் A1-ல் Elta நிறுவனம் உருவாக்கிய AESA ரேடார் பொருத்தப்பட்டுள்ளது. இது அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இந்திய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் பல மில்லியன் டொலர் மதிப்புள்ள பாகங்களுடன் வருகிறது. மேலும், Elbit Systems வழங்கும் ஹெல்மெட்-மவுண்ட் டிஸ்ப்ளே, Rafael நிறுவனத்தின் Derby guided ஏவுகணைகள் போன்றவை இதில் இணைக்கப்பட்டுள்ளன. இந்த விமானங்கள் “Make in India” கொள்கையின் கீழ் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. இஸ்ரேல் விமானங்களுக்கே அமெரிக்க ரேடார்கள் பயன்படுத்தப்படுவதால், இந்த தேஜஸ் விமானங்கள் கூட அதிகமாக இஸ்ரேலிய தொழில்நுட்பங்கள் கொண்டுள்ளன. இந்நிலையில், HAL நிறுவனம், புதிய தலைமுறை தேஜஸ் விமானங்களையும் canard wings-உடன் வடிவமைத்து வருகிறது. இதில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நிறுவனங்களிடையே போட்டி உருவாகியுள்ளது. |