
முன்னாள் எம்.பி. கனகசபை காலமானார்.
20.09.2025 11:17:57
மட்டக்களப்பு களுதாவளையை சேர்ந்ந தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தன்மன்பிள்ளை கனகசபை, தனது 86 ஆவது வயதில் நேற்று (19) வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்
1939.03.20 அன்று பிறந்த ஓய்வுநிலை அரச உத்தியோகத்தரான இவர் 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்டு மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்தேசியத்தின் தீவிர பற்றாளராய் இருந்து தமிழ்த் தேசியப் பரப்பில் பயணித்த அன்னாரது இழப்பு பலரையும் கவலைகொள்ளச் செய்துள்ளது.