மம்மூட்டி, மோகன்லாலே பயப்படும் மாஸ்!
தமிழகத் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கே சவால் விடும் வகையில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவர் தளபதி விஜய். தற்போது அவர் முழுநேர அரசியலில் குதித்திருந்தாலும், அவர் குறித்த பேச்சுகள் தென்னிந்தியா முழுவதும் ஓய்ந்தபாடில்லை. குறிப்பாக, அண்டை மாநிலமான கேரளாவில் விஜய்க்கு இருக்கும் செல்வாக்கு குறித்து மலையாள முன்னணி நடிகர் பிருத்விராஜ் பகிர்ந்துள்ள கருத்துக்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பொதுவாக தமிழ் நடிகர்களுக்கு கேரளாவில் வரவேற்பு இருப்பது வழக்கம் என்றாலும், விஜய்க்கு இருக்கும் இடம் மிகவும் தனித்துவமானது. இது குறித்துப் பேசிய நடிகர் மற்றும் இயக்குநர் பிருத்விராஜ் சுகுமாரன்:
"கேரள மக்கள் விஜயை ஒரு பக்கத்து மாநிலத்து நடிகராகப் பார்ப்பதே இல்லை. அவர் மலையாள ரசிகர்களுக்கு ஒரு அண்ணன். தங்கள் வீட்டு உறுப்பினராகவே கருதி ரசிகர்கள் அவரை அங்கீகரிக்கிறார்கள். கேரளாவில் ஒரு தமிழ் நடிகருக்கு இவ்வளவு பெரிய கொண்டாட்டம் நடப்பது ஆச்சரியமானது எனத் தெரிவித்துள்ளார்.
கேரள திரையுலகின் இரு துருவங்களாகத் திகழ்பவர்கள் மம்மூட்டி மற்றும் மோகன்லால். இவர்களது படங்களுக்கு அங்கே மிகப்பெரிய ஓப்பனிங் இருக்கும். ஆனால், விஜயின் படங்களுக்கு இருக்கும் 'க்ரேஸ்' இவர்களையே யோசிக்க வைக்கிறதாம்.
பிருத்விராஜ் மேலும் கூறுகையில், மலையாள சூப்பர் ஸ்டார்களான மோகன்லால் மற்றும் மம்மூட்டியின் படங்கள் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே வெளியாகும். ஆனால், விஜயின் படம் ரிலீஸ் ஆகிறது என்றால், அந்தத் தேதியில் தங்கள் படங்களை வெளியிடுவதை இந்த ஜாம்பவான்களே கூட தவிர்க்கிறார்கள் என்று கூறியுள்ளார்.