பஞ்சாப் கிங்ஸ் அணி நாணய சுழற்சியில் வெற்றி!

22.09.2021 03:16:10

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 32ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

இந்தநிலையில், இதுவரையில் இடம்பெற்ற இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளின் அடிப்படையில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

அதேநேரம், டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி இரண்டாம் இடத்திலும், 10 புள்ளிகளை பெற்றுள்ள ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணி மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.