மாவீரர் 2ஆம் லெப்.மாலதியின் 38 வது நினைவேந்தல்!

11.10.2025 10:30:28

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் வீரமரணமடைந்த முதல் பெண் போராளி மாலதியின் 38 வது நினைவேந்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை (10) மாலை மன்னார் ஆட்காட்டி வெளியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது.

குடும்ப உறவுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நினைவேந்தல் நிகழ்வில் மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர், அருட்தந்தை, முன்னாள் போராளிகள், உறவினர்கள் ,உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது அவரது உருவப்படத்திற்கு பொதுச் சுடர் ஏற்றப்பட்டு ,மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.