ராஜேந்திர பாலாஜிக்கு முன்பிணை தரக் கூடாது

24.11.2021 13:01:06

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தது தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு முன்ஜாமீன் தரக் கூடாது என பாதிக்கப்பட்ட ரவிச்சந்திரன் ஆதாரங்களுடன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஆவின் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடி பெற்று பணி வழங்காமல் ஏமாற்றியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.