ஜேவிபியினர் படுகொலை குறித்து விசாரிக்க ஆணைக்குழு!
ரோஹண விஜேவீர உள்ளிட்ட கார்த்திகை வீரர்களின் கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் சர்வஜன அதிகாரத்தின் தலைவர் திலித் ஜயவீர முன்மொழிந்துள்ளார். |
கடவத்தையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த திலித் ஜயவீர, “ஜனாதிபதி அனுரகுமார அவர்களே, உங்கள் அன்புக்குரிய தோழர் ரோஹண விஜேவீர மயானத்தில் உயிருடன் சுடுகாட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்ட அந்த படுகொலை தொடர்பில் நீங்கள் ஜனாதிபதியாக பதவியேற்ற நாள் முதல் தேடுவீர்கள் என உங்களுக்காக எமது மக்கள் காத்திருக்கின்றனர். எங்கள் பல்கலைக்கழகத்தில் எங்களுடன் இருந்தவர்கள் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் கிராமத்தை சேர்ந்த அப்பாவி மக்கள். தாஜுதீன், லசந்த மற்றும் எக்னலிகொட பற்றிய வலி எமது கார்த்திகை மாவீரர்கள் தொடர்பிலும் இருக்க வேண்டும். அதைப் பற்றி அவருக்கு நினைவூட்ட விரும்புகிறேன். துணிச்சலான எதிர்க்கட்சியாக பாராளுமன்றத்துக்கு நாம் வருவோம். இந்த நாட்டில் கொல்லப்பட்ட அனைத்து அப்பாவி மக்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஒரு ஆணைக்குழுவை அமைக்கும் யோசனையை நாங்கள் கொண்டு வருவோம்.. அதற்காக நாங்கள் சகோதரர் அநுர குமாரவுடன் நிற்போம்" என்றார். |