உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

02.08.2022 10:02:49

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் இணையவழி ஊடாக மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் 19 ஆம் திகதி வரையுள்ள காலப்பகுதிக்குள் இணையவழி முறை மூலம் 2022 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் அனுப்படவேண்டும் என்றும் அவர் அறிவித்திருந்தார்.

இதன்படி, அனைத்து விண்ணப்பதாரர்களும் www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தின் ஊடாக தமது விண்ணப்பங்களை இணையவழி முறை மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

அரச பாடசாலை மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய முறை 

மேலும், உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் அரச பாடசாலை மாணவர்கள் ஏற்கனவே தமது பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டுமெனவும் பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.