பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் நெதர்லாந்தில் பதிவாகிய கொரோனா தொற்று விபரம் !

18.07.2021 15:30:55

ஐரோப்பாவில் அதிகளவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பிரான்ஸில் நேற்று 10,949 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதுடன் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனை அடுத்து தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 58 இலட்சத்து 55 ஆயிரத்து 198 ஆகவும் இறப்பு எண்ணிக்கை ஒரு இலட்சத்து 11 ஆயிரத்து 467 ஆகவும் அதிகரித்துள்ளது.

இதேவேளை ஜேர்மனியில் ஆயிரத்து 312 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு 16 இறப்புக்களும் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் அங்கு தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 37 இலட்சத்து 51 ஆயிரத்து 234 ஆகவும் இறப்பு எண்ணிக்கை 91 ஆயிரத்து 894 ஆகவும் அதிகரித்துள்ளது.

இதனை தொடர்ந்து நேற்று நெதர்லாந்தில் புதிதாக 11,036 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நெதர்லாந்தில் இதுவரை 17 இலட்சத்து 88 ஆயிரத்து 435 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ள அதேவேளை 17,775 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.