ஊரடங்கையும் மீறி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

03.04.2022 04:25:00

ஊரடங்குச் சட்டத்திற்கு எதிராக கொழும்பில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஹோமாகம, மஹரகம, யக்கல, குருநாகல் உள்ளிட்ட பல இடங்களில் பெருந்திரளான மக்கள் கூடி அரசாங்கத்திற்கு எதிரான கோசங்களை எழுப்பினர்.

மக்களின் எழுச்சியை அடக்குவதற்காக அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டு  திங்கட்கிழமை காலை வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இதையும் மீறி மக்கள் போராட்டம் தொடர்ந்தது.