நாட்டைவிட்டு வெளியேறுவதாக அறிவித்த எலோன் மஸ்க் மகள்!

08.11.2024 08:01:46

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில், நாட்டைவிட்டு வெளியேறுவதாக எலோன் மஸ்கின் திருநங்கை மகள் விவியன் அறிவித்துள்ளார். தற்போது 20 வயதாகும் விவியன் கடந்த 2022ல் தமது தந்தையின் பெயரை தனது பெயருடன் இணைத்து பயன்படுத்துவதை கைவிட்டார். சேவியர் அலெக்சாண்டர் மஸ்க் என ஆணாக பிறந்த விவியன் வில்சன், இனி அமெரிக்காவில் வாழ்வது எளிதல்ல என்று ஒப்புக்கொண்டதுடன்,

   

டொனால்டு ட்ரம்பை வெளிப்படையாக ஆதரித்ததுடன் பரப்புரையும் மேற்கொண்ட தமது தந்தையின் செயலை கடுமையாக விமர்சித்துள்ளார். தமது எதிர்காலம் இனி அமெரிக்காவில் கடினம் என்பதை தாம் புரிந்துகொண்டதாக விவியன் குறிப்பிட்டுள்ளார்.

எலோன் மஸ்கின் 7 பிள்ளைகளில் ஒருவரான விவியன் 2004ல் இரட்டைச் சகோதரர்களாக பிறந்தார். இவரது தாயார் ஜஸ்டீன் வில்சன் 2008ல் மஸ்கை விவாகரத்து செய்து கொண்டார்.

2022ல் தனது பெயரை விவியன் ஜென்னா வில்சன் என மாற்றக் கோரி சட்டப்பூர்வ ஆவணங்களை தாக்கல் செய்தார். தமது தந்தையுடன் இனி வாழ்வதாக இல்லை என்பதுடன் அதற்கான விருப்பமும் இல்லை என்பதாலையே தமது பெயரை மாற்றிக்கொள்வதாக அப்போது விவியன் தெரிவித்துள்ளார்.

இவருடன் பிறந்த இன்னொரு இரட்டையரான சகோதரர் Griffin என்பது குறிப்பிடத்தக்கது.