
அமெரிக்காவில் வலம் வரும்..
தமிழில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தவர் சாக்ஷி அகர்வால். சாக்ஷி அகர்வால் தமிழில் பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். இவர் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில் சாக்ஷி அகர்வால் நடிப்பில், சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 உள்ளிட்ட படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இவர் பல தமிழ் படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சாக்ஷி அகர்வால் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
தற்போது, சுற்றுலாவிற்காக அமெரிக்காவில் உள்ள வேகாஸ் நகரத்திற்கு சென்றுள்ள இவர் தங்க நிற உடையில் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.