'தலைவி' படக்குழுவுக்கு மனமார்ந்த வாழ்த்து - ஜெயக்குமார்

10.09.2021 13:46:18

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளிவந்துள்ள  'தலைவி ' திரைப்பட குழுவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை குறித்த தலைவி திரைப்படத்தை தியேட்டரில் பார்த்த பிறகு ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்போது பேசிய அவர், எம்.ஜி.ஆரை. ஜெயலலிதா அவமதிப்பது போல் இருக்கும் சில காட்சிகளை நீக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

மேலும் எம்.ஜி.ஆரை. மதிக்காமல் ஜெயலலிதா செயல்பட்டார் என்பது போன்ற சித்தரிப்பை ஏற்க முடியவில்லை என்றும் ஜெயக்குமார் கூறினார்.